Search This Blog

Monday, 15 June 2015

பாட்டாளி மக்கள் கட்சியின் இலவசம்.



பாட்டாளி மக்கள் கட்சியின் இலவசம்.
============================================================

வரும் 2016 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஆண்ட, ஆளும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக களம்கண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி அதன் இளைஞர் சங்கத் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் பணி செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தேர்தல் வாக்குறுதிககளையும் அறிவித்துள்ளது. அதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம் வேளாண் இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டம். இது பரவலாக அனைத்துத் தரப்பு மக்களிடமும் விவாத பொருளாக மாறி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் விவசாயம் தனது விளிம்பு நிலையைத் தொட்டு அழிந்து வரும் நேரத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த தேர்தல் அறிவிப்பு தேர்தல் நோக்கர்களாலும், அரசியல் ஆர்வலர்களாலும், பொது மக்களாலும், ஏன் மாற்று கட்சியினராலுமே பெரிதும் பேசப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு உழவுந்து(tractor) இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டியதாகும். "உழுதவன் கணக்குப் பாத்தா ஏரு கூலிக்குக் கூட மிஞ்சாது" என்று கிராமங்களில் ஒரு கூற்று உண்டு. அவ்வாறு தான் உள்ளது இன்று உழவர்களின் நிலை. டிராக்டர் ஏர் கூலியே சிறு குறு விவசாயத்தில் பெரும் செலவாக உள்ளது. அதைக் கட்டுப்படுத்தினாலே கணிசமான தொகையை மீதி படுத்தலாம். இலவச உழவுந்து வழங்கினால் பாதி விலைக்கு உழுது கொடுக்க முடியும். அதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் பயனடைவார்கள்.

அந்த உழவுந்தை ஓட்டுவதற்கான ஓட்டுனர்கள் தேவைப்படுவார்கள். அதனால் நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். அதன் பராமரிப்பு போன்ற செயல்களால் பல பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறுவர். சிறு விவசாயிகளுக்கு இது பெரும் ஊக்கமாக அமையும்.
இவ்வளவு அருமையான பல திட்டங்களை தேர்தல் அறிவிப்புகளாக வெறியிட்டிருக்கும் பாமக வின் செயல்பாடுகளை மக்கள் கவனனிக்கத் தொடங்கியுள்ளனர்.

மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் மக்களின் பார்வையில் நல்லதொரு மாற்று அரசியலைத் தரக் காத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்போம்.

கௌதம் பழனிவேல்.

Sunday, 31 May 2015

மருத்துவர் இராமதாசும் தமிழீழமும்.

மருத்துவர் இராமதாசும் தமிழீழமும்.
==================================================
90களின் ஆரம்ப காலங்களில் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரை சொன்னாலே கைது நடவடிக்கை மேற்கொள்ளும் அளவிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த காலகட்டத்திலேயே, சென்னை மெரினாவில் பத்து லட்சம் தமிழர்களை திரட்டி ஈழத்து சொந்தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து "என் இனத்தின் தலைவன் பிரபாகரன் மட்டுமே" என வீர முழக்கமிட்ட ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.
தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவாக எத்தனையோ பேர் போராடினாலும், மாவீரன் பிரபாகரன் அவர்கள், மாவீரர் நாள் உரையின் போது அவர் வாயால் பாராட்டப் பெற்ற முதல் தமிழக அரசியல் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.
மாவீரனின் உரை பின்வருமாறு.
"ஈழத்தமிழருக்காகவும் தமிழுக்காகவும் போராடிவரும் ராமதாசுக்கு வாழ்த்துக்கள். ஈழத்திற்கு ஆதரவாக, தமிழைப் போற்றும் மக்கள் தொலைக்காட்சி ஒவ்வொரு ஈழத்தமிழனின் வீட்டிலும் பார்க்கப்பட வேண்டும்".
பசுமைத்தாயகம் எனும் அமைப்பைத் தொடங்கி, ஐ.நா சபை வரை சென்று ஈழத் தமிழருக்கு ஆதரவாக இன்று இந்த நிமிடம் வரை போராடி வரும் போராளி.
ஈழத்தில் எம் உறவுகளுக்கு நடந்த கொடுமையை தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய(தடைகளை எதிர்த்து) தொலைக்காட்சி அலைவரிசையின் நிறுவனர்.
இதை எதையும் அரசியலாக்காமல் பசுமை தாயகம் மூலம் உறுதியுடன் போராடிக் கொண்டிருப்பவர் மருத்துவர் ராமதாஸ்.