காவல் தெய்வ வழிபாட்டுக்கு பெயர்போன சேலம் மாவட்டம்.
ஒரு குறிப்பிட்ட குடும்பமோ இனக்குழுவோ ஊர்
மக்களாளோ வணங்கப்படும் தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று வகைப்படுத்தப்
பட்டுள்ளன. பெரும்பாலான காவல்தெய்வ வழிபாடு என்பது தத்தம் முன்னோர்
வழிபாடே. காவல்தெய்வ வழிபாட்டில் பிரதான
இடம் பிடிப்பது முனியப்பன். முனியப்பன் என்பது "முன்னை + அப்பன்" என்பதன்
புணர்ச்சி. அதாவது போரிலோ, ஆநிரைகாத்தோ, ஊர் காத்தோ இறந்துபட்ட
வீரர்களுக்கு அவரின் குடும்பத்தார் மற்றும் ஊரார் கல் வைத்து
வழிபடுகின்றனர். இது நடுகல் எனப்பட்டது. அந்த நடுகற்கள் கால ஓட்டத்தில்
முனியப்பனாராக உருமாறி இருக்கும்.
![]() |
| சேலம் மாவட்டம், மேட்டுப்பாளையம் கிராமம், அருள்மிகு பச்சியம்மன் கோவிலில் உள்ள வாமலையப்பன் எனும் வாழ் முனி. |
ஒருசில இடங்களில் முனியப்பனார் தத்தம் துணைவியாருடன் அமர்ந்து காட்சியளிக்கிறார்கள். சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள எருமைப்பட்டி கிராமத்தில் அருள்மிகு மஹா நல்ல முனியப்ப ஸ்வாமி உடனமர்ந்து காட்சியளிக்கிறார் நல்ல தாயார். இது பொன் போட்டால் பொன் விளையும் போத்தமங்கலம் காணியுடைய மக்களின் குல தெய்வமாகும்.
சில கோவில்களில் முனிகளுக்கு தனியாக பரிவாரங்கள் இருக்கும். முனிகளின் பிரம்மாண்ட உருவங்களுக்கேற்ப வானுயர்ந்த குதிரைகள், வேட்டை நாய்கள், காவல் வீரர்கள் சகிதம் முனியப்பன் இரவில் வேட்டைக்கு செல்வதாக இன்றும் ஒரு ஐதீகம் உண்டு. அவ்வாறு வேட்டைக்கு செல்லும்போது எதிரே யாரும் வரக்கூடாது என்றும் மீறி வந்தால் முனி அடித்துவிடும் என்றும் சொல்லப்படுவதுண்டு.
![]() |
| அருள்மிகு மஹா நல்ல முனியப்ப ஸ்வாமி உடனமர் நல்ல தாயார் |
சில கோவில்களில் முனிகளுக்கு தனியாக பரிவாரங்கள் இருக்கும். முனிகளின் பிரம்மாண்ட உருவங்களுக்கேற்ப வானுயர்ந்த குதிரைகள், வேட்டை நாய்கள், காவல் வீரர்கள் சகிதம் முனியப்பன் இரவில் வேட்டைக்கு செல்வதாக இன்றும் ஒரு ஐதீகம் உண்டு. அவ்வாறு வேட்டைக்கு செல்லும்போது எதிரே யாரும் வரக்கூடாது என்றும் மீறி வந்தால் முனி அடித்துவிடும் என்றும் சொல்லப்படுவதுண்டு.
![]() |
| சேலம் அரிசிப்பாளையத்தில் உள்ள முனியப்பன். குதிரை, வீரர் மற்றும் வேட்டை நாய்களுடன் |
இப்போதிருக்கும் முனியப்பன்கள்
தோற்றத்தில் கம்பீரமாக மிக உயரமாக (20 அடி உயரம் வரை கூட) முறுக்கு
மீசையுடன் வாளேந்தி அமர்ந்திருக்கின்றனர். ஆனால் இவர்களின் மூலவர் என்னவோ
கூம்பு வடிவிலான சிறு கல் உருவங்களே. சேலம் மாவட்டத்தில் திரும்பிய
திசையெங்கும் முனியப்பன் ராஜ்ஜியம் தான். வாழ் முனியாக, செம்முனியாக,
வேதமுனியாக, நல்ல முனியாக, பூமுனியாக, வெண்ணங்கொடி முனியாக பல்வேறு
பெயர்களுடன் ஆங்காங்கே தத்தம் எல்லைகளில் அமர்ந்து ஆட்சி நடத்துகின்றர்.
மாவட்டத்தில் பரவலாக மக்கள் தங்களது வயல்களின் ஓரத்திலும் ஏரிக்கரைகளிலும்
முனியப்பனுக்கான வாழ்விடங்களை அமைக்கின்றனர். பச்சியம்மன் கோவில்களில் உப
தெய்வங்களாக வீற்றிருக்கும் இவர்களுக்கு காவல் பொறுப்பு
ஒப்படைக்கப்பட்டிருக்கும். நகரமயமாக்கலில் பல அடையாளங்களை இழந்த சேலத்தில்
முக்கிய மையப் பகுதிகளில் இன்றும்கூட முனியப்பனுக்கு கோவில் இருப்பதைப்
பார்த்தால் அவருக்கான முக்கியத்துவம் புலப்படுகிறது. NH 7ல் செல்லும்
சரக்கு வாகனங்கள் வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலிலும் மாவட்ட எல்லையான
தொப்பூர் பாலத்து முனியப்பன் கோவிலிலும் பூசையிட்டு வணங்கிவிட்டே
நகர்கின்றன.
![]() |
| அருள்மிகு வெண்ணங்கொடி முனியப்பன் |
ஆளானப்பட்ட மேட்டூர் அணையையே தன் பாத வலிமையால் தாங்கிப்
பிடித்திருப்பது அணைக்கட்டு முனி தான் எனும் நம்பிக்கை அனைவரிடமும்
படர்ந்து கிடக்கக் காரணமில்லாமல் இல்லை. அணை கட்டுமானத்தின் போது எத்தனையோ
மக்கள் குடியிருப்புகளை காலி செய்த வெள்ளையர்களால் முனியப்பனின்
குடியிருப்பை காலி செய்ய முடியவில்லை என்பதுதான். நார்த்திகம் பேசுவோருக்கு
இது நாக்கை துருத்திக்கொண்டு கோரைப் பற்களுடன் அமர்ந்திருக்கும் ஒரு
கட்டுமானமாக இருக்கலாம். ஆனால் இவர்கள் நம் பல வீர செயல்கள் புரிந்த நம்
முன்னோர்கள் என்பதே நிதர்சனம்.
Gowtham Palanivel
Gowtham Palanivel
![]() |
| மேட்டூர் முனியப்பன் |





